1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. ICJ Rules Myanmar Committed Genocide Against Rohingya in Historic Verdict

ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது உண்மைதான்: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு..

சர்வதேச நீதிமன்றம்
ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
கடந்த 2017-ஆம் ஆண்டு மியான்மரின் ராகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்; லட்சக்கணக்கானோர் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து 2019-ஆம் ஆண்டு காம்பியா அரசு தொடர்ந்த வழக்கில், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
 
நீதிமன்றத் தலைவர் யுஜி இவாசாவா மற்றும் நவி பிள்ளை உள்ளிட்ட 15 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 9-6 என்ற பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் கொடூர வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதற்கும் போதிய ஆதாரங்கள் உள்ளதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
மேலும், வெளியேறிய ரோஹிங்கியா மக்கள் தாயகம் திரும்ப மியான்மர் அரசு அனுமதிக்க வேண்டும் எனவும், இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நாட்டின் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாகச் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் வீட்டில் அதிரடி சோதனை.. உறவினர்கள் வீட்டிலும் ரெய்டு...