1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin says cm vijay given gift to tvk mlas

வாய் மட்டும் வேலை செஞ்சி யூஸ் இல்ல.. பன்ச் டயலாக் மட்டும்தான்... விஜயை விளாசிய ஸ்டாலின்...

vijay stalin
சமீபத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னை சந்தித்து தொகுதி பிரச்சனைகளை கூறவந்த கார்த்திக் என்கிற நபரை தாக்கியதாக புகார் எழுந்தது. அதேபோல், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அருள் விக்னேஷ் அதை மறுத்தார்.

இதைத்தொடர்ந்து தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் கூட்டினார். அப்போது எம்.எல்.ஏக்களை அவர் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாவது:

தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.

முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!

Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை’ என பதிவிட்டுள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கமலுக்கு ஒரு வாரம்தான் டைம்!.. சண்டியர் தலைப்பை மாத்தணும்.. கிருஷ்ணசாமி கெடு...