1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm joseph decides free shoes to school students

மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட்!.. 56 கோடி பட்ஜெட்.. தமிழக அரசு முடிவு...

vijay
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகிவிட்டார். அதேநேரம் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க முடியவில்லை என்பதால் திமுக கூட்டணியில் இருந்த அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைத்திருக்கிறார்.

தவெக ஆட்சி அமைத்து தற்போது ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஒரு பக்கம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக ஆட்சியையும், முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஒரு பக்கம் முதல்வர் விஜய் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், மழைகாலம் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா Shoes, Socks, Sweater, Raincoat  வழங்க ரூபாய் 56 கோடி மதிப்பில் ஐந்து டெண்டர்கள் விடப்பட்டிருக்கிறது. மேலும் மலைப்பகுதி மாணவர்களுக்கு Woollen sweater வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் கல்யாணம்.. வெளிநாட்டில் விவகாரத்து!.. உச்ச நீதிமன்றம் வைத்த செக்...