1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay asked the report from mlas

6 மாசமா என்னவெல்லாம் பண்ணீங்க? - எம்.எல்.ஏக்களிடம் ரிப்போர்ட் கேட்ட விஜய்...

vijay
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் முடிந்துவிட்டது. எனவே, தவெகவின் செயல்பாடுகளை அரசியல் விமர்சகர்களும், எதிர்கட்சியான திமுகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுகவைப் பொறுத்தவரை தவெக ரீல்ஸ் ஆட்சி நடைபெறுகிறது.. சட்டம் ஒழுங்கை விஜய் கவனிப்பதில்லை.. அரசு அதிகாரி போல காலை ஒன்பது மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே பணிபுரிகிறார்.. வார இறுதிகளில் அவரை அதிகாரிகள் தொடர்பு கொள்ள முடியவில்லை.. எந்த முக்கிய பிரச்சினைக்கும் விஜய் கருத்து தெரிவிப்பதில்லை என சொல்கிறது.

ஒருபக்கம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு போய்விட்டதாகவும், தொடர்ந்து கொலைகள் நடப்பதாகவும் திமுக கூறி வருகிறது. குறிப்பாக கடந்த தீபாவளியன்று மட்டும் தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. அதில் பெரும்பாலானவை மதுபோதையில் முன்விரோதம் காரணமாக ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்..

ஒருபக்கம் துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆகியோர் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக எம்.எல்.ஏக்களை வரவழைத்து அவர்களிடம் முதலமைச்சர் விஜய் பேசினார்.

அப்போது அவர் எம்.எல்.ஏக்களுக்கு அறிவுரை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
மேலும் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்தது ஆறு மாதங்களில் தொகுதிகளில் செய்த திட்டங்கள் குறித்து விஜய் கேட்டறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மத்திய அரசு ஊழியர்களுக்கு லேப்டாப்.. 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமாக வைத்து கொள்ளலாம்...