கமலுக்கு ஒரு வாரம்தான் டைம்!.. சண்டியர் தலைப்பை மாத்தணும்.. கிருஷ்ணசாமி கெடு...
23 வருடங்களுக்கு முன்பு கமல் சண்டியர் என்கிற படத்தை தொடங்கிய போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அதன் காரணமாக அந்த படத்திற்கு விருமாண்டி என தலைப்பு வைத்து படம் வெளியானது. தற்போது மீண்டும் அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு சண்டியர் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் மதுரையில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என கிருஷ்ணசாமி மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்..
இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி நடிகர் கமல்ஹாசன் ஒரு வாரத்திற்குள் சண்டியர் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும்.. இல்லையெனில், தமிழகத்தில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அவர் எச்சரித்துள்ளார்.
படத்தின் தலைப்பை மாற்ற வேண்டுமென அமைச்சர் ராஜமோகனிடம் மனு கொடுத்துள்ளோம். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தோம். அதை ஏற்றுக் கொண்டு அவர் கமல்ஹாசனுக்கு அறிவுரை வழங்கியதால் கமல் தலைப்பை மாற்றினார்.
2004ம் வருடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட தலைப்பை மீண்டும் கமல் வைத்துள்ளார். இது போன்ற என்கிற தலைப்பால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மீறப்படும்.. எந்த மொழி சாதி, மதத்துக்கும் நாங்கள் ஆதரவாக பேசவில்லை.. இது போன்ற படங்களால் ரசிகர்கள் கெட்டுப் போவார்கள்.. ஆயுதம் மற்றும் வன்முறை கலாச்சாரம் கொண்ட படங்கள் வரக்கூடாது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அவர் பேசியிருக்கிறார்.