1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. National Teachers Welfare Fund Scholarship for Tamil Nadu Government Teachers Children

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.. என்னென்ன நிபந்தனைகள்?

ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வுபெற்ற மற்றும் பணியின்போது காலமான ஆசிரியர்களின் குழந்தைகளுக்காகத் தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து உயர்கல்விக்கான படிப்புதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
MBBS, BE, B.Sc (Agri), சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி பட்டப்படிப்புகளுக்கு ரூ.50,000/- வரையிலும், 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு ரூ.15,000/- வரையிலும் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 
 
ஒரு ஆசிரியரின் ஒரு குழந்தைக்கு மட்டுமே இந்த உதவித்தொகை பொருந்தும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.7,20,000/-க்குள் இருக்க வேண்டும். முதலாமாண்டு தேர்வுகளில் நிலுவையின்றி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். 
 
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கடைசி நாள் 11.12.2026 ஆகும். தகுதியுள்ள ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக  காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்துச்பயன்பெற வேண்டும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரூ.1600 கோடிக்கு கைமாறிய அடையார் ஆனந்த பவன் (A2B)!..