தமிழகமெங்கும் 26 ஆயிரம் போலி புத்தகங்கள் அகற்றம் - தமிழக அரசு அதிரடி..
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் உருவாக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் உள்ள நூலகத்தில் பல புத்தகங்கள் போலியானவை என எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறிய குற்றச்சாட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல போலியான எழுத்தாளர்களின் பெயரிலும், போலி பதிப்பகத்தின் பெயரிலும் பல போலியான புத்தகங்களை அங்கு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் நடந்த விசாரணையில் பெரியார் அறிவுலகத்தில் மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம் உட்பட தமிழகத்தில் பல அரசு நூலகங்களிலும் இதுபோன்ற போலி புத்தகங்களை கடந்த பல வருடங்களாகவே வைத்து பல கோடிகள் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது..
தற்போது காவேக அரசு இதற்குப் பின்னணியில் உள்ள முறைகேடுகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. முதல் கட்டமாக தமிழக முழுவதும் நூலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை, கோவை, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ரூ.91 லட்சம் மதிப்புடைய நூல்களை அகற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது..