தொடர்புடைய செய்திகள்
- சென்னையில எந்தெந்த ஏரியாவில் எவ்ளோ லெவல்ல தண்ணி இருக்கு தெரியுமா?
- ஆல் ஏரியாவுல ஐயா கில்லி... ரவுண்ட் கட்டி ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல்!!
- ஏரியை மீட்ட சமூக ஆர்வலர் வெட்டி கொலை.. பின்னணி என்ன??
- நேபாளத்தில் கடுமையான நிலச்சரிவு.. பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
- ”லைக்” வரும் என்று எதிர்பார்த்து ”வாந்தி’ வந்தது தான் மிச்சம்… ஏரிக்குள் குதித்தவர்களின் பரிதாப நிலை..
உலகின் மிக உயரமான ஏரி இது தான் தெரியுமா??
உலகின் மிகப்பெரிய ஏரி என்ற சாதனை பட்டியலில் நேபாளில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஏரி இடம்பெற உள்ளது.
நேபாள் நாட்டில் மனாங் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் திலிச்சோ என்ற ஏரி உள்ளது. இது தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரியாகும்.
இந்த ஏரி 4 கி.மீ. நீளம், 1.2 கி.மீ. அகலம் கொண்டது. சுமார் 200 மீட்டர் ஆழம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4919 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையேறும் குழுவினரால், சிங்கர்கர்கா பகுதியில் கஜின் சாரா என்னும் ஏரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஏரி கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 மீட்டர் உயரத்தில் உள்ளதாக அறியப்படுகிறது.
இந்த ஏரி சுமார் 1.5 கிமீ நீளம், 600 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. இந்த ஏரி கடல்மட்டத்தில் இருந்து 5200 மீட்டர் உயரத்தில் இருப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் இது தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ல ஏரி என்ற புதிய சாதனையை படைக்கும்.
அடுத்த கட்டுரையில்
