ஏரியை மீட்ட சமூக ஆர்வலர் வெட்டி கொலை.. பின்னணி என்ன??
கரூரில் தனி நபர் பயன்பாட்டிலிருந்த ஏரியை, பொதுமக்களுக்கு மிட்டூத்தந்த சமூக ஆர்வலரை, ஒரு மர்ம கும்பல் நடுரோட்டில் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் உள்ள 40 ஏக்கர் ஏரியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வந்தார். அந்த ஏரியை பொது மக்களின் பயன்பாட்டிற்காக மீட்கப்பட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வாண்டு நல்லதம்பி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏரியை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை, சமூக ஆர்வலர் வாண்டு நல்லத்தம்பி, தனது மோட்டார் வாகனத்தில் தனது தந்தையுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்துள்ளனர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், வாண்டு நல்லதம்பியையும் அவரது தந்தையையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து ஓடினர். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வெட்டுப்பட்ட காயத்துடன், வாண்டு நல்லத்தம்பியும், அவரது தந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த தகவலை அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை குறித்து விசாரனை நடத்தினர். மேற்கொண்டு வாண்டு நல்லதம்பியையும், அவரது தந்தையையும் கொன்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.