நேபாளத்தில் கடுமையான நிலச்சரிவு.. பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Last Updated: செவ்வாய், 23 ஜூலை 2019 (17:40 IST)
நேபாள நாட்டில் பெய்த கனமழையால், கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளடில் பலர் பலியாகி உள்ளனர்.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகவே பருவ மழை பெய்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் குல்கி மாவட்டத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த தகவலை அறிந்த மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுவரை நேபாளத்தில் பெய்துவந்த கனமழைக்கு 95 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேரை காணவில்லை என நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :