வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (14:42 IST)

ஆல் ஏரியாவுல ஐயா கில்லி... ரவுண்ட் கட்டி ஆஃபர் கொடுக்கும் பிஎஸ்என்எல்!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் சலுகைகளை வழங்கியுள்ளது. 
 
பிஎஸ்என்எல் ரூ.1,188 மருதம் சலுகையில் பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் மொத்தம் 1200 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
 
இதில் வழங்கப்படும் 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், ஒரு எம்.பி. டேட்டாவுக்கு 25 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். புதிய சலுகை தற்சமயம் தமிழ்நாட்டில் மட்டும் வழங்கப்படுகிறது. 
முன்னதாக ரூ.1,399 மற்றும் ரூ.1001 விலையில் பிரீபெயிட் சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்தது. ரூ.1,399 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 50 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 270 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
அதேபோல் ரூ.1001 சலுகையில் 9 ஜிபி டேட்டா, 270 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 270 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இவை ஆந்திர பிரதேசம், தெலுங்கானாவில் மட்டும் அறிவிக்கப்பட்டது.