1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Rishab pant broke dhoni record

தோனியின் சாதனையைத் தகர்த்த ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட்
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனிக்குப் பிறகு அதிரடி பேட்ஸ்மேன் + விக்கெட் கீப்பராக உருவாகி வருகிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை அவர் விளையாடிய 26 டெஸ்ட் போட்டிகளில் (50 இன்னிங்ஸ்) 100 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். இதில் 92 கேட்ச்களும் 8 ஸ்டம்பிங்குகளும் அடக்கம். இந்திய விக்கெட் கீப்பர்களில் குறைவான போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்கச் செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கேப்டன் தோனி 36 டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்ததே சாதனையாக இருந்தது.
அடுத்த கட்டுரையில்
கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!