1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (10:22 IST)

அப்பா 30 கி.மீ சைக்கிள் மிதித்த பலன் இது... 200 விக்கெட் சாதனை குறித்து ஷமி!

டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்களை வீழ்த்திய 11 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 

 
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். ஆம், நேற்றைய தினம் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 200 ரன்களுக்குள்ளாக சுருட்டியது. இந்த இன்னிங்ஸில் முகமது ஷமி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். 
 
இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்களை வீழ்த்திய 11 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 200 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த சாதனை குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார், அவர் கூறியதாவது, 
 
200 விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பது மகிழ்ச்சி. நான் ஒரு கிரிக்கெட் வீரராக சாதித்தற்கு என் தந்தையே காரணம். வசதிகள் அதிகம் இல்லாத, இன்றும் அனைத்து வசதிகளும் இல்லாத கிராமத்தில் இருந்து வருகிறேன். என்னை பயிற்சிக்கு அழைத்துச் செல்ல அப்பா 30 கி.மீ சைக்கிள் ஓட்டுவார். அந்த கடினமான நாட்களை நான் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறேன். கடினமாக உழைக்க வேண்டும், நீங்கள் கடினமாக உழைத்தால் சிறந்த முடிவுகளை பெறலாம் என கூறினார்.