செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (09:51 IST)

அத்ராங்கி ரே படைத்த சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிஸ்னி!

தனுஷ், சாரா அலிகான் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான அத்ராங்கி ரே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இதையடுத்து இப்போது தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமாக அத்ராங்கி ரே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை வெளியிட்ட டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அத்ராங்கி ரே டிஸ்னியில் வெளியான படங்களிலேயே முதல்நாளில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது என அறிவித்துள்ளது.