செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (17:28 IST)

2021ல் இங்கிலாந்து அணியின் மோசமான சாதனை!

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை பொறுத்தவரை டெஸ்ட் போட்டியில் மோசமான ஆண்டாக இருந்து உள்ளதை அடுத்து அந்த அணி ஒரு மோசமான சாதனையை செய்துள்ளது
 
2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியின் மோசமான சாதனையாக டெஸ்ட் கிரிக்கெட் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் 50 முறை டக் அவுட் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது. 
 
பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஹமீது டக் அவுட்டானார். பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவர் அவுட்டானதை அடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 50 பேர் டக் அவுட் ஆகி உள்ளனர் என்ற மோசமான சாதனையை இடம்பெற்று உள்ளார்கள்
 
இந்த விக்கெட் மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது. இந்த விக்கெட்டை வீழ்த்திய பேட் கம்மின்ஸ் அவர்களின் சொந்த மண்ணில் 100வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது