1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (22:29 IST)

பாகுபலி சாதனையை ஆர்.ஆர்.ஆர் படம் முறியடிக்கும்- நடிகர் உதயநிதி

பாகுபலி சாதனையை ஆர்.ஆர்.ஆர் படம் முறியடிக்கும் என  நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.

இதில் ராம்சரண் “ராம்” என்ற போலீஸ் அதிகாரியாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கோமரம் பீம் என்ற கோண்டு இன மக்களின் நாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் ஆல்யா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர்  இன்று   வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா  முதற்கொண்டு பல நடிகர்களும் இயக்குனர்களும் இப்படத்தின் டிரைலரை பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், ஆர் .ஆர்.ஆர் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய  நிகழ்ச்சி  நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில்  நடைபெற்று வருகிறது.

இதில், pre Event   நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல  நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி, பாகுபலி சாதனையை ஆர்.ஆர்.ஆர் படம் முறியடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும்,  சென்னை சத்யம் திரையரங்கில் உள்ள 6 திரைகளில் 5 திரைகளில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகும் என்று உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.