பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'Z பிரிவு' பாதுகாப்பு?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியின் தேசியத்தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் நியமிப்பட்டார்.
தற்போது, பாஜக ஆளுங்கட்சிக்கு எதிராக பல புகார்கள், விமர்சனம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலலைக்கு மதத்தலைவர்கள் மற்றும், மாயோயிஸ்டுகளிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக உளவுத்துறை கூறியதாகவும், இதையடுத்து, ஒய் பிரிவில் உள்ள அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த இசடி பாதுகாப்பு பிரிவில் 33 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.