தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இல்லை: பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசு கொடுப்பதை கவர்னர் படிக்க வேண்டும் என்பது மரபு தான் என்றாலும் திமுக அரசு கொடுத்த உரையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த முதலீடு பணத்தில் தமிழ்நாடு தான் அதிகமாக பணத்தை வாங்கி உள்ளது என்றும் இது இந்த அரசின் சாதனை என்றும் உள்ளது
கவர்னர் அதை படித்தார் என்றால் பொய் சாட்சி கொடுப்பதற்கு சமம் என்றும் தமிழ்நாட்டுக்கு வந்தது ஐந்து பில்லியன் டாலரை விட குறைவு என்றும் ஆனால் கர்நாடக அரசுக்கு 18 பில்லியன் டாலர் உள்ளே வந்துள்ளது என்றும் இந்தியாவிலேயே அந்நிய முதலீடு அதிகம் வந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் என்று கவர்னர் எப்படி படிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
உண்மையான உரையை கொடுத்தால் அதை தமிழ்நாடு கவர்னர் கண்டிப்பாக படிப்பார் என்றும் அவர் தனது சொந்த கருத்தை எந்த இடத்திலும் வைக்கவில்லை என்றும் திமுக கருத்தை அப்படியே செய்வதுதான் கவர்னரின் வேலை அல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அமைதி பூங்கா என்று கவர்னர் உரையில் இருப்பதும் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva