வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By BALA
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2026 (10:03 IST)

ஈரானை தாக்கிய இஸ்ரேல் - அமெரிக்கா போர்!.. 600க்கும் மேற்பட்டோர் மரணம்!..

war
கடந்த 2 நாட்களாகவே ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில்தான் முதல் தாக்குதல் நடைபெற்றது. அங்கு பல கட்டிடங்கள் சேதமடைந்தது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அதிபர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் அவரின் மகள், மருமகன், பேரன் உள்ளிட்ட குடும்பத்தினரும் பலியாகினர்.

இதையடுத்து ஈரானுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். மேலும் வளைகுடா நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து ஈரான் தொடர் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டல், புர்ஜ் கலிபா கோபுரம், எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றிலும் ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதனால் அனைத்து வளைகுடா நாடுகளிலும் விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அதேபோல், சுற்றுலாவுக்காக பல அமெரிக்கர்களும் சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

ஒருபக்கம் ஈரானில் இதுவரை 550 பேர் மரணமடைந்துள்ளனர். அதேபோல், இஸ்ரேலில் 12 பேரும், அமெரிக்காவில் 3 பேரும், குவைத்தில் 3 பொதுமக்களும், சவுதியில் 2 பேரும், கத்தாரில் 22 பேரும் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் ஈரான் தலைவர் கொல்லப்பட்டதில் கோபமடைந்த பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை பலரும் தாக்க சென்றார்கள். அவர்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டதில் 20க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.