வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (16:06 IST)

மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டுவது அமைச்சர்கள்தான்- அண்ணாமலை

நீட் தேர்வு தோல்வி காரணமாக நேற்று மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழக அமைச்சர்  மா. சுப்பிரமணியன்  நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு என்றும் மத்திய அரசின் தேர்வு குழுமம் இரவு நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருப்பது குறித்து கவனித்திருக்க வேண்டும் என்றும் இதனால் மாணவ மாணவிகள் அனைவரும் இரவு நேரத்தில் முடிவுகளைப் பார்க்கும்போது ஆதரவாளர் அருகில் இல்லாத சூழல் நிலவி இருக்கலாம் என்றும் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த ஒரு மாநிலத்தின் முதலமைச்சரும்  நீட் தேர்வை எதிர்க்காதபோது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் எதிர்ப்பது ஏன்? மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டுவது அமைச்சர்கள்தான் என அவர் தெரிவித்துள்ளார்.