1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Retired judge Karnan tested positive

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா!

கர்ணன்
நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாகவும் கருத்து தெரிவித்ததாகவும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு சமீபத்தில் சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது 
 
மேலும் அவரை ஏன் கைது செய்யவில்லை என்றும் போலீசாருக்கு கேள்வியும் எழுப்பியது இதனை அடுத்து டிசம்பர் இரண்டாம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
 
இந்த நிலையில் சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் தற்போது அவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது
About Writer
siv
அடுத்த கட்டுரையில்
தமிழக ஆளுனரை சந்தித்த சூரப்பா! விசாரணை ஆணையம் குறித்து முறையீடு என தகவல்