செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (10:37 IST)

போதையில் போலீஸிடமே வம்பு; கைது செய்யப்பட்ட பெண் உதவி இயக்குனர்!

சென்னையில் மது அருந்திவிட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் போலீஸாரிடம் அநாகரிகமாக பேசிய பெண் உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூர் பகுதியில் போலீஸார் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரில் இளைஞரும், இளம்பெண் ஒருவரும் வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது வாகனம் ஓட்டிய இளைஞர் மது அருந்தியதாக சந்தேகித்த போலீஸார் அவரை இறங்கி வர சொல்லியுள்ளனர்.

உடனே இளைஞருடன் இறங்கி வந்த இளம்பெண் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை உடனிருந்த காவல்ர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபோது அதை தட்டி விட்டிருக்கிறார். விசாரணையில் அவர் பிரபல சினிமா நடன இயக்குனரின் பேத்தி என்பதும், தற்போது இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இருவரையும் காவல்துறையினர் கைது செய்த நிலையில் இளைஞர் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். காவலர்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட பெண் இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.