செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (17:39 IST)

சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் – மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் வெளியிட்டதால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க முயற்சித்து  வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சென்னை அடுத்த ஆவடியில் உள்ள முன்னாள் நீதிபதி கர்ணனின் வீட்டில் வைத்து அவரைக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சிறைத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.