1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. no special class on holidays order to private school

விடுமுறை நாட்கள் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது!.. தனியார் பள்ளிகளுக்கு செக்!...

school
கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் உள்ள தனியார் வகுப்புகள் வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இப்படி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. சிறப்பு வகுப்புகள் மூலம் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை எடுக்கவைத்து மாணவர் சேர்க்கைக்கு அதையே விளம்பரமாக தனியார் பள்ளிகள் பயன்படுத்தி வருகிறது.

ஆயுத பூஜையை ஒட்டி இன்றும், நாளையும் அரசு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்துவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து அரசு விடுமுறை நாட்களில் நேரடி, இணைய வழி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஷேக் ஹசினா காலத்தில் விமானப்படைத் தலைவராக இருந்தவர் துபாயில் கைது.. வங்கதேசத்தில் பரபரப்பு...