புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:50 IST)

சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!

Robbery
சமீபத்தில் சென்னையில் தனியார் வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதும் இதனை அடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் யாவரும் பிடிபட்டனர் என்பதும் கொள்ளை போன அனைத்து நகைகளும் மீட்கப்படது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது இது குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறை சென்னை தனியார் வங்கி நகை கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.