புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (14:14 IST)

பிரபல எண்ணெய் நிறுவன குடோனில் தீ விபத்து...

Fire
சென்னை வானகரத்தில் உள்ள மிஸ்டர் கோல்ட் நிறுவன எண்ணெய் குடோனில் தீப் பிடித்து எரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விற்பனையாகும் சமையல் எண்ணெய் பிரான்டுகளில் முக்கியமானது MR.Gold.,இது 100%  Gold என்று விளம்பரங்களில் மக்களிடையே பிரபலமானது.

இந்த நிலையில்,  சென்னை வானகரத்திலலுள்ள மிஸ்டர் கோல்ட் எண்ணெய் குடோனில் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.  இங்குள்ள தீ பக்கத்து குடோன் களுக்கும் பரவி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறை தீயை அணைத்து வருகின்றனர். இங்கு தங்கியிருந்த வடமா நில இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.