திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (10:43 IST)

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி இன்று மேல்முறையீடா?

Edappadi
அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று சென்னை ஐகோர்ட் பரபரப்பான தீர்ப்பு வழங்கிய நிலையில் இந்த தீர்ப்பு ஓபிஎஸ் அவர்களுக்கு சாதகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த உள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு என்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சட்ட வல்லுநர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததாகவும் ஆலோசனைக்கு பின்னர் இன்று மதியத்திற்கு மேல் சுப்ரீம் கோர்ட்டில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இருவரும் இணைந்து கட்சியை வழி நடத்துவோம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ பன்னீர்செல்வம் செய்தி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன