1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. a.raja apology for his controversy speech

முதல்வர் பழனிசாமியிடம் மன்னிப்பு கோரினார் ஆ.ராசா!

a.rasa
எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என ஆ. ராசா பேட்டி. 

 
திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா முதல்வரின் தாயார் குறித்து பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இதற்கு ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கண்ட்னம் தெரிவித்திருந்தனர். இதனிடையே, திருவொற்றியூரில் பரப்புரை மேற்கொண்ட போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆ.ராசாவின் விமர்சனம் குறித்து பேசிய கண்கலங்கினார். 
 
இந்நிலையில் இன்று ஆ. ராசா  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பின்வருமாறு பேசினார், எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை செய்திதாள்கள் வழியாக கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இடப்பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்துகொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதின் ஆழத்திலிருந்து வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமென்றால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்கு அல்லாமல், உள்ள படியே காயப்பட்டிருப்பதாக உணர்வாரேயானால் என மனம் திறந்த மன்னிப்பை கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை. எனது பேச்சு இரண்டு தலைவர்களை பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடும் ஒப்பீடும்தான் என தெரிவித்துள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!