1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (12:46 IST)

பள்ளியை தூய்மைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் அதிமுக பெண் வேட்பாளர்!

பள்ளியை தூய்மைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் அதிமுக பெண் வேட்பாளர்!
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வினோதமான நடவடிக்கைகளின் மூலம் வாக்குகளை கேட்டு வருகிறார்கள் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் அதிமுக பெண் வேட்பாளர் ஒருவர் துடைப்பத்தை எடுத்து பள்ளியை தூய்மைப்படுத்தி வாக்குகள் கேட்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 100 நாள் வேலை செய்யும் பெண்களுடன் பள்ளியை தூய்மைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் பணியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஈடுபட்டுவந்தார் 
 
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் இவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று ஒரு பள்ளி அருகே வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அந்த பள்ளியை சில பெண்கள் துடைப்பத்தால் தூய்மை படுத்திக் கொண்டிருந்தனர். உடனே ஒரு பெண்ணின் துடைப்பத்தை கையில் வாங்கிய அவர் பெண்களோடு பெண்களாக அவரும் பள்ளியை தூய்மைப்படுத்தினார். அதன்பிறகு அங்கிருந்த பொதுமக்களிடம் அவர் வாக்கு கேட்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன