திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (13:11 IST)

டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

அதிமுகப் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது காவல்துறையினர் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதிமுக திமுக கூட்டணியை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக உள்பட ஒருசில கட்சிகள் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து டிடிவி தினகரன் பிரசாரம் செய்து வருகிறார்.  அந்த வகையில் நேற்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அமைச்சர் சிவி சண்முகம் தேர்தலில் வெற்றிபெற பண மூட்டையை மட்டுமே நம்பி உள்ளதாகவும் அவர் ரூபாய் 200 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார் 
 
தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பகிரங்கமாக டிடிவி தினகரன், 200 கோடி ரூபாய் அமைச்சர் சிவி சண்முகம் செலவு செய்ய உள்ளதாக கூறியுள்ளதை அடுத்து அதிமுகவினர் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன