1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (12:52 IST)

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தபால் வாக்கு: கோரிக்கை நிறைவேறுமா?

80 வயதுக்கு மேலானவர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் இருப்பவர்களுக்கு மட்டும் தபால் வாக்குகள் வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது 
 
கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு பெருமளவு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கொரோனா நோய் பாதித்தவர்கள் வாக்குப் போடும் போது அவர்கள் வாக்களிக்க தயங்குவார்கள் என்னும் என்றும் அதனால் கடைசி நேரத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் வாக்குபதிவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர் 
 
தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகவும் இது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிய வருகிறது