1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Infoysis president Ravikumar resigned his post

இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா!

infoysis
இன்ஃபோசிஸ் தலைவர் ரவிக்குமார் திடீர் ராஜினாமா!
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 20 ஆண்டுகளாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பல்வேறு பதவிகளில் இருந்த ரவிக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை ஏற்றார் 
 
அவரது தலைமையின் கீழ் இன்போசிஸ் நிறுவனம் மிகச் சிறப்பாக இயங்கியது என்பதும் நல்ல லாபத்துடன் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீரென இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது
 
இன்போஸிஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா காரணமாக நிறுவனத்தின் பங்குகள் சரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
நீரவ் மோடி இந்தியா திரும்பினால் தற்கொலை செய்து கொள்வாரா?