திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (09:19 IST)

திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்: துணை பொதுச்செயலாளர் பதவியும் ராஜினாமா!

subbulakshmi1
திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்: துணை பொதுச்செயலாளர் பதவியும் ராஜினாமா!
முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கிய பிரபலமான சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென திமுகவில் இருந்து விலகி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி தகுதியை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் 
 
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது தோல்விக்கு காரணம் திமுகவினர் தான் என்றும் அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவும் இதுகுறித்து அவர் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தனது புகார் மீது திமுக தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த சில நாட்களாக திமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென திமுகவில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு திமுகவில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.