திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (07:49 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

petrol
சென்னையில் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்றும் சென்னையில் அதே நிலையில் தான் பெட்ரோல் டீசல் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த 5 மாதங்களாக சென்னை உள்பட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதற்கு முக்கிய காரணம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது
 
தற்போது உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் ஐந்து மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva