திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (18:51 IST)

ஒரே நேரத்தில் இரண்டு வேலை: ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் எச்சரிக்கை

infosys
ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்யும் தங்களது நிறுவன ஊழியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை இன்போசிஸ் நிறுவனம் அமல்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை பயன்படுத்தி ஊழியர்கள் பகலில் ஒரு நிறுவனத்திற்கு வேலை இரவில் ஒரு நிறுவனத்திற்கு வேலை என ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதுகுறித்த புகார்கள் வந்தவுடன் இன்போசிஸ் நிறுவனம் தற்போது தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையைப் சாதகமாக பயன்படுத்தி ஊழியர்கள் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு வேலை செய்தாலோ அல்லது வேலை நேரத்திற்கு பின் மற்றொரு நிறுவனத்திற்கு வேலை பார்த்தாலோ உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.