வியாழன், 6 அக்டோபர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: புதன், 21 செப்டம்பர் 2022 (18:59 IST)

சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா: அடுத்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழியா?

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென ராஜினாமா செய்து அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார் 
 
இதனை அடுத்து அவரது துணை பொதுச்செயலாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்று திமுக தலைமை ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
திமுகவின் விதிகளின்படி துணை பொதுச்செயலாளர் பதவி ஒரு பெண்ணுக்குத்தான் அளிக்க வேண்டும் என்பதால் இந்த பதவி கனிமொழி எம்பி அவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு சில பெண் பிரபலங்களும் குறிப்பாக புதுக்கோட்டை விஜயா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திமுக துணை பொதுச்செயலாளராக யாரை நியமனம் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்