1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Yuvraj singgh biopic his dad gave an update

யுவ்ராஜ் சிங்கின் பயோபிக் குறித்து அப்டேட் கொடுத்த தந்தை யோக்ராஜ் சிங்!

யுவ்ராஜ் சிங்
கபில் தேவுக்குப் பிறகு இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக உருவாகி வந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்களிப்பு அளப்பரியது.

ஆனால் அவரால் அதற்கடுத்து வந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் வரிசையாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில் யுவ்ராஜ் சிங் தன்னுடைய பயோபிக் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய பயோபிக் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த பயோபிக் குறித்து பேசியுள்ள அவரின் தந்தை யோக்ராஜ் சிங் பேசியுள்ளார். அதில் “தி மேன் ஆஃப் தி லாங்கஸ்ட் ஹவர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் யுவ்ராஜுக்கும் எனக்கும் இடையிலான பாசப்பிணைப்பு அதிகமாக பேசப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசம் ஆக்கிக்கொண்ட தென்னாப்பிரிக்கா!