ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!
உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான CRPF வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் ஈஷாவின் சார்பில் TNAU வில் நடைப்பெற்ற விழாவில் தமிழக ஆளுநர் மாண்புமிகு திரு. ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக யோக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இலவச யோக வகுப்புகளை மிகப்பெரிய அளவில் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது. ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான CRPF வீரர்களுக்கு யோகப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
அதேபோல் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் திரு. R.N. ரவி அவர்கள் கலந்து கொண்டார். அவருடன் வேளாண் பல்கலைகழக மாணவர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். மேலும் ஆதியோகி முன் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.
அதே போன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, INS அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், CRPF மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்போசிஸ் அலுவலகம், பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைப்பெற்றன.
இந்த இலவச யோக வகுப்புகளில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோக பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.