செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (08:27 IST)

வெளிநாட்டு வீரரை தன் பயிற்சியாளர் குழுவுக்குள் இணைக்க ஆசைப்படும் கம்பீர்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆவது குறித்து பேசியு கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள கம்பீர் மற்றும் டபுள்யு வி ராமன் ஆகியோருக்கு நேர்காணல் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இடையே நேர்காணல் நடைபெற்றாலும் கம்பீர்தான் பயிற்சியாளராக வரப்போகிறார் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் தான் பதவியாளராக வந்தால் தன்னுடைய குழுவில் ஃபீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் வீரர் ஜாண்டி ரோட்ஸ் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அவரை தொடர்புகொண்டு பேசியுள்ளாராம். அதனால் இந்திய அணிக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.