தொடர்புடைய செய்திகள்
- இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு… கம்பீருக்கு இன்று சம்பிரதாய நேர்காணல்!
- கம்பீர் அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு எங்களுக்காக உழைத்தார்… KKR அணி வீரர் நெகிழ்ச்சி!
- “பாகிஸ்தானுக்காக நேரத்தை வீணடிக்காதீர்கள்… இந்திய அணிக்கு வாருங்கள்”- கேரி கிறிஸ்டனை அழைக்கும் முன்னாள் வீரர்!
- இது ஒரு அணியே கிடையாது… வீரர்களுக்குள் ஆதரவே இல்லை- பாக் பயிற்சியாளர் புலம்பல்!
- இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!
கம்பீர் மட்டுமில்லை, இந்த தமிழக வீரரும் விண்ணப்பித்துள்ளாரா? இந்திய அணிக்கு யார் அடுத்த பயிற்சியாளர்?
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆவது குறித்து பேசியு கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரான டபுள்யு ராமனும் அந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் கம்பீர்தான் அடுத்த் பயிற்சியாளர் என்பது கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்டு விட்டது என்று தகவல்கள் உலாவருகின்றன.
அடுத்த கட்டுரையில்