தொடர்புடைய செய்திகள்
- குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர்
- மோடியின் தாடிதான் வளர்கிறது - மம்தா பானர்ஜி விமர்சனம்
- 15 மாதங்களுக்கு பின் வெளிநாடு கிளம்பினார் பிரதமர் மோடி!
- மாஸ்க் அணிந்து ஹோலி கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
- பிரச்சாரத்தில் மோடி புகைப்படத்தை பயன்படுத்தாத பாஜக வேட்பாளர்கள்- கே டி ராகவன் வருத்தம்!
பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வாருங்கள் என பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் ஏப்ரல் மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் உலக சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியபோது காணொளி வாயிலாக நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை வகிக்க உள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் அந்த அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி காணொளி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
