வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (08:06 IST)

பிரச்சாரத்தில் மோடி புகைப்படத்தை பயன்படுத்தாத பாஜக வேட்பாளர்கள்- கே டி ராகவன் வருத்தம்!

பாஜக வேட்பாளர்களான ஹெச் ராஜா மற்றும் வானதி சீனிவாசன் ஆகியவர்கள் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தாதது குறித்து பேசியுள்ளார் மற்றொரு பாஜக வேட்பாளர் கே டி ராகவன்.

நாடாளுமன்ற தேர்தல்களில் எப்படி மோடி அலை என்று சொல்லி பாஜக பிரச்சாரம் செய்கிறதோ அதற்கு எதிரான மோடி எதிர்ப்பு அலை தமிழகத்தில் உள்ளதோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களே மோடியின் படத்தையோ அல்லது அமித் ஷா படத்தையோ பயன்படுத்துவதில்லை. மற்றக் கூட்டணிக் கட்சி தலைவர்களின் படங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இது சம்மந்தமாக பாஜக வேட்பாளர் கே டி ராகவன் பிரச்சாரத்தில் மோடி மற்றும் அமித் ஷா படங்களை பயன்படுத்தாதது வருத்தமளிக்கிறது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.