புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (06:36 IST)

அரை நூற்றாண்டில் சரி செய்யாதவர்கள், இனி எப்படி சரி செய்வார்கள்: கமல் டுவீட்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது ஒவ்வொரு பிரச்சாரத்திற்கு ஏராளமான மக்கள் கூடுகிறார்கள் என்பதும் அவரது பேச்சுக்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசனை எதிர்த்து போட்டியிடும் கமல்ஹாசன் அவர்கள் வெற்றி பெறுவார் என்றும் அவர் முதன்முதலாக சட்டமன்றத்திற்குள் நுழைவார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பிரச்சாரம் ஒருபுறமிருக்க டுவிட்டரிலும் அவர் ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்து எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் அரை நூற்றாண்டாக சரி செய்யாதவர்களின் இனி எப்படி சரி செய்வார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சனை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக் கூட சரி செய்யாதவர்கள்,இனி எப்போது செய்வார்கள்?