தொடர்புடைய செய்திகள்
- இம்ரான்கானின் முயற்சி நிச்சயம் பலிக்காது: பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்
- கொரோனா இருந்தால் மட்டுமே அனுமதி: பிரபல சுற்றுலாத்தளத்தின் வித்தியாசமான நிபந்தனை
- கொரோனாவிலும் கொடிக்கட்டி பறக்கும் அம்பானி! – பிக் பஜாரை வாங்கிய ரிலையன்ஸ்!
- கூட்டம் கூட்டிய முன்னாள் அமைச்சர் பொன்முடி; வழக்கு போட்ட போலீஸார்!
- இந்தியாவில் 35 லட்சத்தை தாண்டிய கொரோனா! – குணமடைவோர் எண்ணிக்கை அதிகம்!
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: மரண எண்ணிக்கையும் அதிகரிப்பதால் பரபரப்பு
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,53,77,704 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 850,149 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகில் கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 17,700,949 பேர் மீண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 369 பேர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 398 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 673 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 2வது நாடான பிரேசிலில் 3,862,311 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல் அதிக பாதிப்பை சந்தித்த 3வது நாடான இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,619,169 ஆக உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றால் 120,896 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் 64,617 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை அடுத்து பெரு, தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் சிலி நாடுகள் கொரோனா பாதிப்படைந்த முதல் பத்து நாடுகள் பட்டியலில் உள்ளன.
அடுத்த கட்டுரையில்
