இந்தியாவில் 35 லட்சத்தை தாண்டிய கொரோனா! – குணமடைவோர் எண்ணிக்கை அதிகம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 35 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியா முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,42,733 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையிலான மொத்த உயிரிழப்புகள் 63,498 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27,13,933 ஆக உயர்ந்துள்ளது.