செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (14:57 IST)

கொரோனா இருந்தால் மட்டுமே அனுமதி: பிரபல சுற்றுலாத்தளத்தின் வித்தியாசமான நிபந்தனை

கொரோனா இருந்தால் மட்டுமே அனுமதி:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டே வெளியே வரக்கூட அனுமதி இல்லை என்றும் தனிமைப்படுத்துதலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உலகம் முழுவதும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு சுற்றுலாதலம் திறக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றுலா தளத்திற்கு செல்ல வேண்டுமானால் கொரோனா பாசிட்டிவ் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது பிரேசில். இந்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை பாதிப்பை தவிர்ப்பதற்காக அங்கு உள்ள ஒரு சுற்றுலாதீவு  தற்போது திறக்கப்பட்டு உள்ளது 
 
ஆனால் இந்தத் தீவில் நுழைய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருக்கும் நோயாளிகள் இந்த தீவிற்கு வந்தால் புத்துணர்ச்சி பெறுவார்கள் என்ற நோக்கத்தில் இந்த தீவு திறக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தீவுக்கு வருகை தருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பாசிட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் செய்திகள் வெளியாகி உள்ளது