வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (13:13 IST)

கொரோனாவிலும் கொடிக்கட்டி பறக்கும் அம்பானி! – பிக் பஜாரை வாங்கிய ரிலையன்ஸ்!

கொரோனாவிலும் கொடிக்கட்டி பறக்கும் அம்பானி! – பிக் பஜாரை வாங்கிய ரிலையன்ஸ்!
இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமம், பிக்பஜார் உள்ளிட்ட பியூச்சர் குரூப் நிறுவனங்களை கையகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னனி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் சமீப காலமாக வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிக்பஜார் உள்ளிட்ட பியூச்சர் நிறுவனங்களின் விற்பனை கடைகள், குடோன்கள் உள்ளிட்ட அனைத்தையும் ரூ.24,713 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் பிக்பஜார் மற்றும் ப்யூச்சர் நிறுவனங்களின் விற்பனை கடை பங்குகள் அனைத்தும் ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.