வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (11:32 IST)

கூட்டம் கூட்டிய முன்னாள் அமைச்சர் பொன்முடி; வழக்கு போட்ட போலீஸார்!

விழுப்புரத்தில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 317 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட திமுக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளிகள் கடைபிடிக்கப்படாமலும் கூட்டம் நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பி லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.