ஒமிக்ரான் 500% கூடுதல் தொற்றும் தன்மை கொண்டது
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதுவரை இருபத்தி மூன்று நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் நேற்று ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவிவிட்டது என்பதும் இந்தியாவில் 7 பேருக்கு இந்த வைரஸ் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் 500 சதவீதம் தொற்று தன்மை உடையது என்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் 2 நோஸ் தடுப்பூசி போட்டவர்களை ஒமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பாதிக்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஒரு டோஸ் தடுப்பு ஊசி போட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை சரியான நேரத்தில் செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்