வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (16:48 IST)

வேலூரில் பொது இடங்களுக்கு வந்தால் தடுப்பூசி கட்டாயம்!!

வேலூரில் பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவு. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அதிகமாக இருந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கூட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம்தோறும் நடத்தப்படுகின்றன. எனினும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் வேலூரில் பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரேஷன் கடைகள், டீக்கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், ஹோட்டல்கள், திரையரங்குகள், தங்கும் விடுதிகள், கடை வீதிகள், பெட்ரோல் நிலையங்களுக்கு வருவோருக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என வேலூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.